Blog

சிறுகதை 6 : “டீக்கடைக்குப் போலாமா?”

“டீக்கடைக்குப் போலாமா?” ஓய்ந்து தீர்ந்த மழையில் நனைந்து தீர்ந்த துணிகளை சலிப்புடன் காயவைக்க முயற்சித்து கொண்டிருந்த தன் மனைவியிடம் மெல்லிய குரலில் கேட்டான்.”டீக்கடைக்கு? இந்த மழையில? ம்ம்ம்!”என்றபடி மீண்டும் வேலையை தொடர்ந்தாள் அவள்.”நான் உன்ன டீக் குடிக்க கடைக்குப் போலாமா னு கேட்டேன்!”என்று மீண்டும் வினவினான்.”இப்போ எதுக்கு டீ கடைக்குப் போகனும்? வீட்லயே பால் இருக்கு, டீத்தூள் சர்க்கரை இருக்கு, டீப் போட்டுத் தர நானும் இருக்க! வேணும்‌ னா நீங்கக் கூட டீப் போட்டு குடிங்க!…

பெறுநர் இல்லா கடிதம்! பாகம்-1

முன்னுரை: கடிதம், மன்னர் கால ஓலைச்சுவடி துவங்கி இன்றைய மின்னஞ்சல் வரை பல தலைமுறைகளை ஆட்சி செய்து கொண்டு வருகின்ற மாபெரும் இணைப்புக்கருவி. கடிதத்தின் மூலம், நாம் நினைக்கும் ஒருவருடன் நம்மை இணைத்துக் கொள்கிறோம். கடிதம், உண்மையில் உள்ளத்துடன் நெருங்கி, மனதினை வருடி, சிந்தையையும் சற்று தொட்டு, எழுத்துக்களின் வழி நின்று உணர்வுகளைவெளிக்கொணரும் ஒரு அழகிய செயல்முறை. ஒருவர், எளிதில் வார்த்தைகளை வாயினின்று பேசி விடலாம். ஆனால், எழுத்து என்பது நேரம் எடுத்துக் கொள்ளும் ஓர் நீண்ட…

கட்டுரை 2: “திருமணம் Vs வணிகம்!”

“வரதட்சணை” வரன் + தட்சணை வரனுக்கு கொடுக்கப்படும் தட்சணை (வெகுமதி, பரிசு, உதவிக்கான சன்மானம்) ஆம், இதிலிருந்தே நாம் ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.  இந்த பெயர் காரணமும், பெயர்களும் வடமொழியிலேயே முழுக்க முழுக்க இருப்பதினின்று, “வரதட்சணை” என்ற சொல் தமிழுக்கு சொந்தமில்லை என்பதையும், தமிழர் மரபிற்கு பொருத்தமில்லை என்பதையும் ஆராய்ந்து பார்க்க முடியும். “சீதனம்” என்ற சொல் தமிழ் சொல்லாக நமக்கு தோன்றலாம். ஆனால் அதுவும் கூட, ஸ்திரீ(பெண்)+ தனம்(செல்வம்) என்று பிறக்கப்பட்ட வடமொழி சொல் என்பதை நாம் அறிந்து…

சிறுகதை 5 : “துணி…”

அது ஒரு முழு ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை, ஊரே அமைதி உருவெடுத்து அசையாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தது. சாலைகளும், தெருக்களும், சந்து பொந்துகள், மூலை முடுக்குகள் என எல்லா இடங்களும் முற்றிலும் துடைத்து எடுத்தது போன்று காலியாக இருந்தது. தலைமுறைகள் கேட்காமல் இருந்த சின்ன சின்ன பறவைகளின் சத்தங்களும் விலங்குகளின் ஓசைகளும் ஏன், சிறு சிறு பூச்சிகளின் ரீங்காரங்கள் கூட கேட்கும் வண்ணம் அத்தனை தூய அமைதி. வாகனங்கள் ஓடும் பாதைகளில் நாய் குட்டிகள் படுத்து புரண்டு கொண்டு இருந்தன.…

கட்டுரை 1 : “பெண்ணதிகாரம்!”

‘மகளிர் தினம்’ வந்தாலே போதும் உலகமே ஒருங்கிணைந்து பெண்ணினத்தின் அருமை பெருமை சாதனைகளை பட்டியலிட்டபடி போற்றி முடிக்கும் இந்த ஒரு நாளுக்கு மட்டும். ஆண்டு முழுவதும் இம்மாதரசிகளின் செயல்களுக்கெல்லாம் புகழ் பாடி முடிக்க இந்த ஒரு நாள் போதுமானது உலகத்தின் பார்வைக்கு. முக்கியமானது என்னவெனில், இந்த ஒரு  நாளும் கூட வீட்டு வேலைக்கு விடுமுறை நாளல்ல நம் இல்லத்தின் தவப் புதல்விகளுக்கு. மேலும், ஒரு பெண்ணாக… தன் பெண் தன்மைகளை சுமந்து கொண்டு, பெண் குணங்களை தன்னுடன்…

சிறுகதை 4 “சென்னை கடற்கரை!”

“வீட்டுக்கு போய் சேர வேண்டும்” முடிந்தவரை அதிக வேக விரைவில், வீடு திரும்ப வேண்டும். பழைய மாகாபலிபுர (OMR) பரபரப்பான பிரதான சாலையில், ஷேர் ஆட்டோவில் ஏறியது முதல் இப்போது இறங்கும் வரை, இரயில் ஏறுவது முதல் இரயில் இறங்கும் வரை மீண்டும் பிளாட் ஃபார்ம் கடந்து பேருந்தை பிடித்து வீடு சேரும் வரை, என் மனதில் துடித்துக் கொண்டிருக்கும் அந்த ஒரே வரி, “வீட்டுக்கு போய் சேர வேண்டும்” காலையில் உறக்கத்தில் சிறிதளவு தியாகம் செய்துவிட்டு, காலை…

சிறுகதை: 3 “சிந்தனை கொலை!”

அனல் நிறைந்து பரவிக் கொண்டிருக்கும் பின் காலை பொழுதிலே, ஏதோ காற்றின் கருணை தழுவுதலால் சற்று உயிர் வாழ்ந்து கொண்டு, சாளரம் ஓர இருக்கையில் சிறிது சோர்வாகவே அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்தேன், சென்னை மாநகராட்சி அரசு பேருந்தில். சிவப்பு நிற ஒளி விளக்கின் கட்டாயத்தினால் சில மணி துளிகள் களைத்து போய், நின்ற வண்ணம் இருந்தது பேருந்து. நகரவாசிகளுக்கு மட்டுமே பழக்கமான, சலசலப்பு கூடிய சத்தப் பேரணிகள்… வியர்வையும் வெறுப்புமாய்… காதுகளில் பேரொலியுமாய், அசைவற்ற நிலையை…

சிறுகதை: 2 ‘அறிவியல் தீண்டாமை’

ஊரடங்கு காலத்தில் நமக்கு பழகிப்போன ஒன்று, பரபரப்பு இல்லாத காலை நேரம். குறிப்பாக சொல்லிக் கொள்ளும் வகையில் வீட்டில் எனக்கு எந்த வேலையும் இல்லை. நான் அரசுப் பள்ளியில் படிப்பதால் ஆன்லைன் வகுப்புகள் கூட எனக்கு இல்லை. அன்று மிகுந்த சோர்வுடனே எழும்பினேன். வெகு நேரம் தூங்கிக் கொண்டிருந்த அப்பாவை பார்த்ததும் ஓர் அசாதாரண உணர்வு ஏற்பட்டது. ஏனெனில் அவர், சீக்கிரம் எழுந்து வேலைக்கு தவறாது செல்லும் கழிவுநீர் சுத்திகரிப்பு கூலி தொழிலாளி. அவர் அருகில் சென்று…

சிறுகதை: 1 ‘டப்டப்’

‘டப்டப்’ ‘டப்டப்’ என்ற ஓயா சத்தம், இரைச்சலாய் இருந்தாலும், இலவசமான இசையாய் தெரிந்தது எனக்கு. வேறு ஒன்றும்  இல்லை, மழையின் துளிகள் அனுமதியின்றி என் வீட்டுக் கூரையின் ஓட்டையின் வழி தரையில் கொட்டிக் கொண்டிருந்தன. என் தனிமைக்கு துணையாக வந்த அழையா விருந்தினர். என் நினைவுக்கு மெருகு சேர்க்க வந்த இயற்கையின் கட்டாய இன்பம். இன்னும் நிற்கவில்லை ‘டப்டப்’ ‘டப்டப்’ என்ற ஒலியின் அதிர்வுகள். அவற்றின் ஒலி வேக மாறுதல்கள், மழையின் நிலையை யூகிக்க உதவின. சற்று…


Follow My Blog

Get new content delivered directly to your inbox.